
தமிழக அரசானது விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உழவர் அட்டை மற்றும் பயனாளிகள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி பயனாளரின் குடும்பத்திற்கு திருமண நிதி உதவிதொகையானது ஆணிற்கு 8000, பெண்ணிற்கு பத்தாயிரம் வழங்கப்படுகிறது. மேலும் உறுப்பினர் இறந்துவிட்டால் அவர்களுக்கு 20000 தொகையும், இறுதி சடங்கிற்கு 2500 அளிக்கப்படுகிறது.
இதனை அடுத்து கல்வி நிதி உதவியாக அவர்களுக்கு கல்வியை அவர்களுடைய கல்வி நிலையத்தை பொறுத்தும் வழங்கப்படுகிறது. மேலும் முதியோர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 18 முதல் 65 வருடங்கள் வரை உள்ள தமிழ்நாட்டுச் சேர்ந்த கூலி வேலை செய்பவர்கள், விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் https://www.tnesevai.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வை இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.