உலகம் தற்போது தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மாற்றக் கட்டத்தை அடைந்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது 100 ஆண்டுகளாக தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் IBM நிறுவனம். 2023ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் 8,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது.

அதே நேரத்தில், இது எளிதான வேலைகளை ஆட்டோமேஷன் மூலம் செய்து முடிக்கும் AI (அர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்) தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியது.

IBM நிறுவனம் உருவாக்கிய AI தளம் AskHR, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகளில் 94% செயல்பாடுகளை தானாக செய்யும் திறன் பெற்றது. இதன் காரணமாக, 70க்கும் மேற்பட்ட துறைகளில், $3.5 பில்லியன் மதிப்பிலான உற்பத்தி திறன் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதே போன்று, Google, Spotify போன்ற நிறுவனங்களும் ஆதரவு வேலைகளில் ஆட்டோமேஷனை கொண்டு வந்துள்ளன. ஆனால், இதனால் வேலைவாய்ப்பு குறையவில்லை. IBM CEO சொல்வதாவது, “AI வந்ததால் சில வேலைகள் நீக்கப்பட்டாலும், புதிய வேலைகள் உருவாகின.”

AI காரணமாக ஏற்படும் மாற்றத்தால், படைப்பாற்றல், விமர்சன சிந்தனை, நேரடி மனித தொடர்பு போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. மென்பொருள் பொறியாளர்கள், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத் துறைகளில் புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 2024ஆம் ஆண்டில் AskHR தளம் 11.5 மில்லியன் கோரிக்கைகளை கையாள்ந்தும், சில (6%) கோரிக்கைகளுக்கு இன்னும் மனித உதவி தேவைப்படுவது மனிதர்களின் பங்களிப்பு தொடரும் என்பதையும் காட்டுகிறது. AI முழுமையாக மனிதனை மாற்ற முடியாது என்பதை IBM நிறுவனம் தெளிவாக நிரூபித்துள்ளது.