
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை பகுதியில் திவ்யா என்ற 26 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (30). இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் இருவருக்குள்ளும் விரிசல் அதிகமான நிலையில் திவ்யாவை தொடர்ந்து சுதீர் பின் தொடர்ந்துள்ளார். அதோடு செல்போனுக்கு தொடர்பு கொள்வது குறுஞ்செய்தி அனுப்புவது என சுதீர் செய்த நிலையில் பின்னர் திவ்யாவிடம் பேச வேண்டும் என கூறி ஒரு இடத்திற்கு அழைத்துள்ளார்.
அவர் சொன்ன இடத்திற்கு திவ்யா வந்த நிலையில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் சுதீர் திவ்யாவை கத்தியால் சரமாரியாக குத்திய நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து சுதீர் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.