கன்னியாகுமாரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பீர் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம்  செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை அழைத்து பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியிடம் தன்னுடைய வீட்டில் கருவேப்பிலை இருப்பதாகவும், அதை வீட்டுக்கு எடுத்து செல்லுமாறும்  கூறியுள்ளார்.

இதனால் அச்சிறுமியும்  பீர் முகமது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு அழைத்து  சென்ற பின், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி கூச்சலிட்டு கத்தியுள்ளார். உடனடியாக பீர்முகமது அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பெற்றோர்களிடம் சிறுமி கூறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பீர்முகமதை தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.