விதிமுறைகளை மீறிய 8 கூட்டுறவு வங்கிகளின் உ ரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணப்புழக்கம் இல்லாததால் வங்கி சேவைகளை வழங்கி வந்த கூட்டுறவு வங்கிகளில் சேவா விகாஸ் வங்கி, டெக்கான் நகர வங்கி, மிலாட் வங்கி, முதோல் வங்கி, ஸ்ரீ ஆனந்த் வங்கி, பாபாஜி டேட் மகிளா சககாரி வங்கி, மகிளா அர்பன் வங்கி, லட்சுமி வங்கி ஆகியவை அடங்கும். எனவே இவற்றில் பணம் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளானது கிராமப்புறம் மற்றும் நகரப்புற பகுதிகளில் வங்கி சேவைகளை வழங்கி வருகிறது.

கடமையான கட்டுப்பாடுகள், மோசமான பொருளாதார நிலைமைகள் மற்றும் உள்ளூர் அரசியல் காரணமாக அதிகமான அழுத்தம் கூட்டுறவு வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. மோதியளவு மூலதனம் மற்றும் பிற விதிமுறைகளை மீறியதன் காரணமாக இந்த கூட்டுறவு வங்கிகளின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த குறிப்பிட்ட வங்கிகளில் பணம் புழக்கம் இல்லாததாலும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் சிரமங்களை சந்திக்க நேரிடும்.