தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளராக மாறிவிடலாம் என அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக அமைந்துள்ள நிலையில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு கூறியுள்ளதால் ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட இருக்கிறது.

இந்நிலையில் மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் ஓடிவிடு ஓடிவிடு. 8 தோல்வி எடப்பாடி பழனிச்சாமியே அதிமுக கழகத்தை விட்டு ஓடி விடு என்ற வாசகம் இருக்கிறது. மேலும் இந்த போஸ்டரில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் பெயர்கள் இருக்கிறது.