
பாஜக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான சுப்பிரமணிய சுவாமி பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடி ஓய்வை அறிவிக்க வேண்டும். பிரதமருக்கு அப்போது 75 வயது ஆகும் என்பதால் கண்டிப்பாக அந்த வயதில் ஓய்வு அறிவிப்பது அவசியம்.
ஒருவேளை அந்த வயதில் அவர் ஓய்வை அறிவிக்கவில்லை எனில் வேறு வழிகளில் நாற்காலியை நிச்சயம் இழக்கக்கூடும் என்று கூறியுள்ளார். மேலும் கட்சியினர் மோடி தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் தற்போது 75 வயதில் அவர் ஓய்வு பெற வேண்டும் என மூத்த தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.