
செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, DMK எம்எல்ஏ வீட்டிலே ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி ஒரு கொடுமை நடந்து இருக்கிறது. முதலமைச்சராக ஒரு வார்த்தை பேசி இருக்கிறாரா ? இல்லை ஒரு ஆறுதல் தெரிவித்தாரா ? இல்லை இது நடந்தது தவறு. அப்படி நடந்திருக்கக்கூடாது. அவர்களுக்கு நான் ஆதரவாக இருக்கிறேன் என்று சொன்னாரா ? எதுவுமே சொல்லவில்லை.
நடக்குதா ? நடக்கட்டும். போலீஸ் நமது கையில் தான இருக்கிறது. நாம என்னவேனும்னாலும் பண்ணிக்கலாம் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, இதுவரைக்கும் முதலமைச்சர் அவர்கள் வெளியே வந்து பெண்களுக்கு சப்போர்ட்டாக பேசியது இதுவரை நான் பார்த்தது கிடையாது.
போலீஸ் நம்ம கையில் தான் இருக்கிறது. நாம என்ன வேணும்னாலும் பண்ணிக் கொள்ளலாம் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே தவிர இதுவரைக்கும் முதலமைச்சர் வாட்கள் வெளியே வந்து, பெண்களுக்கு சப்போர்ட்டாக பேசியது இதுவரை நான் பார்த்ததே கிடையாது.
எங்களுக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 100 கேஸ் வரும். அந்த 100 கேஸ் வரும் பொழுது… எனக்கு கீழே ஐந்து மாநிலங்கள் இருக்கிறது. அந்த ஐந்து மாநிலங்களில் இருந்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு 100 கேஸ் வந்துவிடும். எங்களுக்கென்று ஒரு கமிட்டி இருக்கின்றது. அந்த கமிட்டியில் இன்வெஸ்டிகேஷன் ஆபீஸர்ஸ் இருக்கிறார்கள். எல்லாமே அப்ரூவ் பண்ணி, இன்வெஸ்டிகேஷன் ஆபிசர் அதை பார்ப்பாங்க. அதில் பல கேஸ், கொஞ்சம் பொய்யான கேஸ் இருக்கும். சில கேஸ் சும்மா பழிவாங்கும் முறையில் இருக்கும்.
உண்மையான கேஸ் எடுத்துட்டு, அது மட்டும் நாங்கள் இன்வெஸ்டிகேட் பண்ணி, அதை ஆக்சன் எடுக்கிறோம். போலீஸ் இடம் பேசுகிறோம். உங்களுக்கு தெரியும். லாஸ்ட் டைம் நானே வரும் பொழுது இங்கே DGPயாக இருந்த சங்கர், சைலேந்திரபாபு அவர்கள் இருக்கும் போது பார்த்துவிட்டு, 720 கேசஸஸ் 2 வருடத்தில் தமிழகத்தில் நான் கொடுத்திருந்தேன். இது எல்லாம் நாங்க பண்ணிக் கொண்டுதான் இருக்கிறோம், நிறைய கேஸ் நாங்கள் பார்க்கின்றோம் என தெரிவித்தார்.