இந்தியாவின் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை நிர்வாக அதிகாரிகள் தலைமையில் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டன. சென்ற வாரத்தில் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, ஆகாசா ஏர், அலையன்ஸ் ஏர், ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிடமும் 70-க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்பு மிரட்டல்கள் வந்துள்ளன என இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டது. இந்த மிரட்டல்களில் பெரும்பான்மையானவை வதந்திகள்.

மேலும் குறிப்பாக நேற்று ஒரு நாள் மட்டும் 30க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன என விமானப்படை பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் விமான போக்குவரத்து பாதுகாப்புத்துறை இயக்குனர் ஜூலிக்கர் ஹாசன் கூறியதாவது, இந்தியாவின் வான்வெளி மிகவும் பாதுகாப்பானது. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் எந்தவித பயமும் இன்றி செல்லலாம். இந்தியா வான் வெளி பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் கவனத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.