திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களுடன் மினி வேனில் திருநாகேஸ்வரத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அவர்கள் உசிலம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கொம்பேறிப்பட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நாகராஜ், பூபதி, நிலா, பூஜா, உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.