
சென்னை திருவிக நகர் பகுதியில் விஸ்வநாதன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் பாலிடெக்னிக் முடித்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த வாலிபர் கடந்த 7 வருடங்களாக தன்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணும் இவரை காதலித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு மாத காலமாக அந்த பெண் திடீரென விஸ்வநாதனிடம் பேசுவதை தவிர்த்த நிலையில் காதலை கைவிடுமாறும் கூறியுள்ளார். இது பற்றி விசுவநாதன் தன் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் மாலை அவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.