உத்திர பிரதேசத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் அம்மாநில அரசு ஆபரேஷன் தண்டனை என்ற திட்டத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 29 வழக்குகள் தேர்வு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது. அவற்றில் 74 ஆயிரத்து 388 வழக்குகள் தீர்வு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் 68 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 8172 பேருக்கு ஆயுள் தண்டனையும், 1453 பேருக்கு 20 ஆண்டுகளுக்கு மேலான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 87 ஆயிரத்து 465 பேருக்கு 20 ஆண்டுகளுக்கு கீழான சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 97 ஆயிரத்து 158 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் போக்சோ வழக்குகளில் 17 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் 619 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.