தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித் தகுதிகளுக்கு ஏற்றவாறு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதி உடையவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது கட்டாயம்.

இந்நிலையில் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 2023 ஜனவரி 31 வரை பதிவு செய்துள்ளவர்களின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் 67,58,698 பேர், ஆண்கள் 36,09,027 பேர், பெண்கள் 31,49,398 பேர், அதிகபட்சம் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 28,56,600 பேர், 60 வயதை கடந்தவர்கள் 28,56,00 பேர், மாற்றுத்திறனாளிகள் 1,45,481 பேர் உள்ளதாக தெரிவித்துள்ளது.