மதுரை மாவட்டத்தில் கருப்பாயூரணி என்ற பகுதி உள்ளது. இங்கு வீராயி என்ற 80 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் வயது மூப்பு காரணமாக கடந்த 8-ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார். இவருடைய கணவர் முத்து அம்பலம். இவருக்கு 85 வயது ஆகும் நிலையில் தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தீராத துயரில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரும் தூக்கத்திலேயே இறந்துவிட்டார். மேலும் 67 வருடங்கள் கணவன் மனைவியாக ஒற்றுமையாக வாழ்ந்த இந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியவில்லை. அடுத்தடுத்த நாட்களில் இருவரும் இறந்தது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.