சீனாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் பெங்யாங் ட்ரம் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் சுமார் 650 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோபுரத்தை பார்ப்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அந்த வகையில் நேற்றும் வழக்கம் போல் இந்த கோபுரத்தை காண சுற்றுலா பயணிகள் சென்றிருந்த நிலையில் திடீரென அந்த கோபுரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் அனைவரும் அங்கிருந்து ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த கோபுரம் கடந்த 1375 ஆம் ஆண்டு மிங் வம்சம் ஆட்சி செய்த போது கட்டப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த கோபுரத்தின் கூரைகள் சேதமடைந்த நிலையில் தற்போது இடிந்து விழுந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.