செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நாங்கள் இப்போது ஒவ்வொரு பகுதியாக எங்களுடைய புரட்சித் தமிழன் எடப்பாடியார் ஆணைக்கிணங்க….  கிராமங்களுக்குள் செல்லுகிற போது எல்லா பகுதிகளிலும் முதியோர் ஓய்வூதியத்தை,  குறிப்பாக தகுதியுள்ள ஓய்வூதியங்கள் எல்லாம் ரத்து செய்யப்படுவதாக என்னிடத்தில் புகார் கொடுக்கின்றார்கள்.

இரண்டு மாதம், மூன்று மாதம், 6 மாதம், 8 மாதம், 10 மாதம் என்று வரவில்லை. கேட்டால் இந்த புதிய 1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தினால் இது பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக மக்கள் எங்களிடத்திலே தெரிவிக்கின்றார்கள். அதேபோன்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தேர்தல் வாக்குறுதிகளிலே அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்,

100 நாள் வேலைவாய்ப்பை 150 நாளாக உயிர்த்தி தருகிறேன் என்று சொன்னார்கள். அதேபோல 220 ரூபாய் சம்பளத்தை 300 ரூபாய் கொடுத்து தருகிறேன் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது இருக்கிற அந்த சம்பளத்தை கூட கொடுக்க முடியாமல்…  தீபாவளி நேரத்துல ஏழை –  எளிய சாமானிய கூலி தொழிலாளர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

அது குறித்து தொடர்ந்து எங்களிடத்திலே வருகின்ற மனுக்களையும் அவர்களிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மழைக்காலங்களில் இன்றைக்கு மருத்துவ முகாம். எனக்கு தெரிந்து அக்டோபர், நவம்பர் , டிசம்பர் மூன்று மாத காலம் வடகிழக்கு பருவ மழை. விவசாயிகளுக்கு நன்றாக தெரியும்….  எல்லோருக்கும் தெரிந்த ஓன்று தான்.

இது ஒன்னும் புதுசா  வருதில்ல. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் வடகிழக்கு பருவமழை. ஏற்கனவே தென்மேற்கு பருவமழை நமக்கு பொய்த்து போய்விட்டது. அதனால் நமக்கு தண்ணீர் இல்லை. இந்த வடகிழக்கு பருவமழை இப்போ நமக்கு  போதுமான அளவு வந்து கொண்டிருக்கிறது. அதை பயன்படுத்தி இப்போது 110 கிராமங்களுக்கு  கால்வாய் திட்டத்தில் அது பயன்படும் என்று தான்  நாம் சொல்றோம். இது நியாயமான  கோரிக்கை என தெரிவித்தார்.