ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற 3 நாடுகளுக்கான 6 நாள் சுற்றுப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கவுள்ளாா். இந்த பயணத்தின்போது ஜி7, க்வாட் உச்சி மாநாடுகள், பல நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்புகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்க உள்ளாா்.
வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று (மே 19) தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு பிரதமா் மோடி இன்று செல்லவுள்ளார்.