தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. இவருடைய கல்வி தகுதி தான் தற்போது இணையதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது கடந்த 2006-ம் ஆண்டு தேர்தல் வெற்றி சான்றிதழில் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்றும், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் எம்.ஏ வரலாறு படித்தவர் என்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்றும் ட்விட்டரில் போலி பத்திரம் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. இந்த போலி பத்திரத்தை வெளியிட்டவர் பாஜக கட்சியின் தீவிர ஆதரவாளரும் சமீபத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் என்பவர் தான்.

இவர் அமைச்சர் எ.வ வேலுவின் கல்வி தகுதி குறித்த போலி சான்றிதழை தற்போது இணையத்தில் வெளியிட்ட நிலையில், திமுகவினர் அவரை விளாசி வருகிறார்கள். 2006-ம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு மட்டும் தேர்ச்சி பெற்றுவிட்டு 2021-ல் எம்ஏ பட்டதாரி ஆக உயர்ந்த மேஜிக் மேன் என்று பதிவிட்டுள்ளார். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்று வெளியிட்டுள்ள ஆதாரம் சுயேச்சை வேட்பாளர் எ.க. வேலுவின் கல்வி தகுதி. இதை திமுக கட்சியினர் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். மேலும் தற்போது திமுகவினர் பொய் செய்தி பரப்பிய கார்த்திக் கோபிநாத்தை விளாசி வருகிறார்கள்.