மத்திய பணியாளர் தேர்வாணையம் SSC தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 50,180 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வுகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மத்திய அரசின் CAPF, CISF, NCB, SSF ஆகியவற்றின் கான்ஸ்டபிள் ஆக இணைவார்கள். இந்நிலையில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://ssc.nic.in/என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.