
தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 75 கோடி ரூபாயில் 5 ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் சிறப்பு சுய உதவி குழுக்களின் பொருட்களை விற்பனை செய்ய மூன்று கோடியில் 100 மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் வாங்கப்படும். மகளிர் குழுக்கள் சிறுதானிய உணவகங்கள் நடத்திட 1.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுய உதவி குழு மகளிருக்கு சமையல் பயிற்சி வழங்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.