
உத்திர பிரதேசத மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் சந்திரசேகர்- இந்திராவதி(51) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இந்திராவதி தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆசாத்(25) என்பவர் உடன் நெருக்கமாக பேசி பழகி வந்தார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் சந்திரசேகருக்கு தனது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்ட காரணத்தினால் அவரை பின்தொடர்ந்தார்.
அப்போது ஆசாத்துடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு தெரிய வந்தது. உடனே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இந்திராவதிக்கு அந்த நபர் பேரன் உறவுமுறை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை சந்திரசேகர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற நிலையில் காவல்துறையினர் அவர்கள் இருவரும் வயது வந்த பெரியவர்கள் என்பதால் வாழ்க்கை துணையை முடிவு செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று புகார் பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கும் இந்திராவதிக்கு ஆசாத்துடன் கோவிந்த் சாகிப் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. இது தொடர்பாக சந்திரசேகர் தான் அடிக்கடி வேலை காரணமாக வெளியூர் சென்ற நிலையில் தொடர்பு ஏற்பட்டதாகவும், தனது மனைவி தன்னை விஷம் வைத்து கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறினார். மேலும் பேரன் வயதில் இருக்கும் நபரை இந்திராவதி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.