
மும்பையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 13 வயது சிறுமியிடம் 50 ரூபாய் தருவதாக கூறி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றார். அதன் பிறகு அந்த நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் 50 ரூபாய் பணத்தை சிறுமியின் கையில் கொடுத்து விட்டு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி விட்டு அந்த நபர் தப்பி சென்றார். இதனால் சிறுமி யாரிடமும் அந்த விஷயத்தை சொல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் சிறுமியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தன்னை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.