
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜேஜே ஹாஸ்பிடல், செவன் ஹில்ஸ், கோகினூர், ரஹேஜா, ஜஸ்லோக் உட்பட 50 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனால் அங்கு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில் மும்பை மாநகராட்சிக்கும் இதே போன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அங்கும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோன்று முன்னதாக சென்னை, கோவை, பாட்னா உள்ளிட்ட 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டலுக்கு விபிஎன் நெட்வொர்க்கை பயன்படுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.