பஹாமியன் பயணத்திலிருந்து டிஸ்னி ட்ரீம் போர்ட் லாடர்டேலுக்குத் திரும்பினர். அப்போது அந்தக் கப்பலில் இருந்த 5 வயது சிறுமியின் ஒருவர் கப்பலின் நான்காவது தளத்திலிருந்து கடலில் குதித்தார். இதனைப் பார்த்த அவரது தந்தையும் அவரை காப்பாற்ற கடலில் குதித்தார். அதன் பின் அவர் தனது குழந்தையை 20 நிமிடங்கள் கையில் தூக்கிப் பிடித்தவாறு நீந்த வைத்தார். இதையடுத்து விரைந்து வந்த மீட்பு படையினர் அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

 

டிஸ்னி குரூஸ் இந்த சம்பவத்திற்குப் பிறகு பதிலளித்துள்ளார். இதுகுறித்து கூறியதாவது, “எங்கள் குழு உறுப்பினர்களின் விதிவிலக்கான திறமைகள் மற்றும் உடனடி நடவடிக்கைகளுக்காக நாங்கள் பாராட்டுகிறோம், இது இரண்டு விருந்தினர்களும் சில நிமிடங்களில் கப்பலுக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்தது,” என்று அவர்கள் கூறினர்.

“எங்கள் விருந்தினர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும் இந்த சம்பவம் எங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளின் செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது.” என்று கூறியுள்ளனர்.