கேரளா மாநிலத்தில் உள்ள மலை கிராமத்தில் வசிப்பவர்கள் சிவதாசன் – ஓமனா தம்பதி. இந்த தம்பதிக்கு கடந்த ஐந்து மாதங்களாக முதியோர் பென்ஷன் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த தம்பதி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கருணை கொலைக்கு தயார் என போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நிதி நெருக்கடி காரணமாக முதியோர் விதவை உள்ளிட்ட பென்சன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.