தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது. இன்று மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிந்துவிடும் நிலையில் தமிழகத்தில் பாஜக இந்த முறை வலுவாக காலுன்றும் என கணித்துள்ளது.

அதாவது குறிப்பாக அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், பொன். ராதாகிருஷ்ணன், ராதிகா சரத்குமார், எல்.முருகன் ஆகிய 5 பேர் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றியை நிச்சயம் என பாஜக நம்புகிறது. ஒருவேளை பாஜகவின் கணிப்பு உண்மையாகி 5 பேரும் வெற்றி பெற்றால் தமிழகத்தில் அது பாஜகவின் தனிப்பெரும் சாதனையாக கருதப்படும். இருப்பினும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவால் நிச்சயம் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று கூறி வருகிறது. மேலும் பாஜகவின் கணிப்பு பலிக்குமா.? இல்லையா என்பது இன்று தெரிந்துவிடும்.