நாடு முழுவதும் கடந்த வருடம் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து நடப்பு வருடத்தின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் 5g சேவை கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் 5 ஜி வயர்லெஸ் வைஃபை வசதியை டெல்லி மற்றும் மும்பையில் முதற்கட்டமாக அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்ட்ரீம் ஏர் பைபர் 100 எம்பிபிஎஸ் வேகத்தை வயர் லெஸ் மூலமாக கொடுக்கிறது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் 64 சாதனங்களை அதிக வேக இணையத்தை பெற முடியும். அடுத்து சில மாதங்களில் நாடு முழுவதும் இந்த திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 799 கட்டணத்துடனும் வைப்புத் தொகையாக 2500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.