
திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடைபெற உள்ளதால் 43 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்செந்தூர் இடையே அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் ரயில், ராமேஸ்வரம் மற்றும் மதுரை இடையே அதிகாலை 5.40 மணிக்கு முன்பதிவு இல்லாத ரயில், மதுரை மற்றும் தேனி இடையே காலை 8.5 மணிக்கு இயக்கப்படும் ரயில், தேனி மற்றும் மதுர இடையே மாலை 6.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், மதுரை மற்றும் செங்கோட்டை இடையே காலை 11.30 மணிக்கு இயக்கப்படும் ரயில், செங்கோட்டை மற்றும் மதுரை இடையே காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லாத ரயில்கள் மார்ச் 1 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றது.
அதனைப் போலவே திருச்செந்தூர் மற்றும் பாலக்காடு இடையே மதியம் 12.5 மணிக்கு இயக்கப்படும் ரயில், மதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே காலை 6.50 மணிக்கு முன்பதிவு இல்லாத ரயில், மதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே மதியம் 12.30 மணிக்கு முன்பதிவு இல்லாத ரயில், ராமேஸ்வரம் மற்றும் மதுரை இடையே காலை 11 மணிக்கு இயக்கப்படும் ரயில், மதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே மாலை 6.10 மணிக்கு இயக்கப்படும் ரயில், செங்கோட்டை மற்றும் திருநெல்வேலி இடையே காலை 10.5 மணிக்கு இயக்கப்படும் ரயில், திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை இடையே மதியம் 1.50 மணிக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லாத ரயில்கள் மார்ச் 1 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது