பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 தொடரில் ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியின் வெளிநாட்டுவீரர் ஜேம்ஸ் வின்ஸ் அபூர்வமான சதம் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிராக 235 ரன்கள் என்ற இலக்கை துரத்திய அவர், வெறும் 43 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களும் அடங்கும். அவரது அதிரடி ஆட்டத்தால் கராச்சி கிங்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்த அசத்தல் ஆட்டத்துக்கான பாராட்டாக, ஜேம்ஸ் வின்ஸுக்கு டிரஸ்ஸிங் ரூமில் ஹேர் ட்ரையர் பரிசாக வழங்கப்பட்டது. மற்ற வீரர்கள் அவரின் பெயரை கோஷமிட்டபடி பாராட்டினர். இது ரசிகர்களிடையிலும் சமூக வலைதளங்களிலும் வைரலானது. அதே நேரத்தில், கராச்சி அணியின் கேப்டனாக தனது PSL பயணத்தை தொடங்கிய டேவிட் வார்னருக்கும் சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளது. இது வீரர்களுக்குள் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக அமைந்தது.