
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் அரசு உதவி வழக்கறிஞர் பணிகளுக்கான 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், 4000 பேர் விண்ணப்பித்தனர்.
இந்த தேர்வு நேற்று நடைபெற இருந்த நிலையில் பல தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல வழக்கறிஞர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் உருவானதோடு முறையாக விண்ணப்பித்த பல வழக்கறிஞர்களின் பெயர்கள் தேர்வு மையங்களில் விடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
4000 வழக்கறிஞர்கள் எழுதும் தேர்வுகளையே முறையாக நடத்த முடியவில்லை என்றால் மற்ற தேர்வுகளை எல்லாம் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் எப்படி நடத்தும். இதை நம்பி காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு என்ன ஆகும். அரசு பணிகளை இப்படி அலட்சியமான முறையில் கையாளும் திமுக அரசை நான் கண்டிக்கிறேன். மேலும் நேற்று நடைபெற இருந்த தேர்வை இன்னொரு நாளில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.