அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான போட்டித்தேர்வு ஆக.4ஆம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் 28 முதல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், இத்தேர்வுக்கு நேற்று வரை விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பத்தை திருத்தம் செய்ய மே 19 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.