தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் ‘தக் லைப்’  திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் ஜூன் 5-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட படகு குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, ரசிகர்களின் கூட்டத்தை பொறுப்புடன் நீங்கள் வழி நடத்துகிறீர்கள். இது சுமையல்ல சுகம் என்ற நடிகர் சிம்புவை பார்த்து அவர் கூறினார். அசோக்செல்வன் தன்னைக் கூட்டத்தில் ஒருவராக நின்று ரசித்து வேடிக்கை பார்த்தார். இதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேனே தவிர முதலமைச்சராக ஆவதற்கு அல்ல.

ஒரு எம்எல்ஏ 40 வருஷம் என்ன செய்ய வேண்டுமோ அதனை நான் மெல்ல மெல்ல செய்து வருகின்றேன் என்று கூறினார். மேலும் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் அவருக்கு விரைவில் நாடாளுமன்ற எம்பி சீட்டு வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.