4 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

குஜராத், கெளவுகாத்தி, திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சோனியா கிரிதர் கோகனி, திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஐஸ்வந்த் சிங், அசாம் மாநிலம் கெளவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்தீப் மேத்தா நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கோட்டீஸ்வர் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சட்டத் துறை கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். இவ்வாறு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.