தமிழகத்தில் சித்திரை மாதம் வந்தாலே ஒவ்வொரு கோவிலிலும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம்.

அதேபோன்று தற்போது தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதத்திலும் 10 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா கொண்டாடப்படும்.

அதனால் இன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேனியில் உள்ள கண்ணகி கோவிலில் வரும் மே 12ஆம் தேதி சித்திரை முழு நிலவு திருவிழா கொண்டாடப்படும்.

அதற்கு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த விடுமுறைக்கு மாறாக வரும் மே 17 மற்றும்  மே 31ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவிழா விடுமுறையாக மே 9 முதல் மே 12 வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.