
மேக்சிஸ் நிறுவன உரிமையாளரும், 2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மலேசியா வாழ் தமிழ் தொழிலதிபருமான ஆனந்த கிருஷ்ணன்(86) உயிரிழந்தார். மலேசியாவின் மிகப்பெரிய தொலைபேசி நிறுவனமான மேக்சிஸ், ஆஸ்ட்ரோ டிவி குழுமம் இவருக்கு சொந்தமானது. அந்த நாட்டின் நான்காவது பெரிய கோடீஸ்வரர் அனந்தகிருஷ்ணன் தான். இவர் மலேசிய முன்னாள் பிஎம் மஹாதிருக்கு நெருக்கமானவர். மலேசியாவின் பிரபல Petronas towers கட்டும் ஆலோசனையை இவர்தான் அளித்துள்ளார்.