மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷாஜாதி கான் (39). இவர் அபுதாபியில் உள்ள சிறையில் தற்போது மரண தண்டனை கைதியாக இருக்கிறார். அதாவது 4 மாத குழந்தையை கொலை செய்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஷாஜாதி கான் சட்டபூர்வமாக விசா பெற்று அபுதாபி சென்றார். இவரை ஒருவர் வேலைக்கு அழைத்த நிலையில் அவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பராமரிக்கும் வேலையை அந்த பெண் செய்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி வழக்கமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அப்போது திடீரென குழந்தை உயிரிழந்து விட்டது. இந்நிலையில் ஷாஜாதி கான் தான் அந்த குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரும் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் மேல் முறையீடு செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அவருடைய மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி ஷாஜாதி கான் தன் தந்தைக்கு தொடர்பு கொண்டு மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட விவகாரத்தை கூற அவர் உடனடியாக தன்னுடைய மகளின் நிலை குறித்து சட்டபூர்வமாக மத்திய அரசிடம் கடிதம் கேட்டார். ஆனால் எந்த பதிலும் வராததால் அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டெல்லி உயர்நீதிமன்றம் நடத்திய விசாரணையில் கடந்த 15ஆம் தேதியே அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தது. கடந்த 28ஆம் தேதி தான் அபுதாபியில் இருந்து அந்த பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கியது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. மேலும் அவருக்கு மார்ச் 5-ம் தேதி இறுதி சடங்குகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.