
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார் குடியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சந்திரசேகர் தான் ஒரு பேக்கரி கடை உரிமையாளர் எனக்கூறி மஞ்சு என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மஞ்சுவும் தான் ஒரு நர்ஸ் எனக்கூறி சேகரை ஏமாற்றியுள்ளார். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மஞ்சுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நாடார் குடி அருகில் இருக்கும் கோவிலில் 4 மாத குழந்தை காயத்துடன் சடலமாக கிடந்துள்ளது. உடனே போலீசாருக்கு தெரிவிக்காமல் சந்திரசேகர் குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் வருவாய் துறை முன்னிலையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரசேகர் அவரது தாய் ஆகியோரை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கணவன் மனைவி இருவரும் கருப்பாக இருந்த நிலையில் குழந்தை மட்டும் எப்படி சிறப்பாக பிறந்தது என சந்திரசேகர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். மேலும் அடிக்கடி மஞ்சு யாரிடமோ செல்போனில் பேசியதால் சந்திரசேகருக்கு சந்தேகம் வந்தது.
சம்பவம் நடைபெற்ற அன்று இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இருவரும் மாறி மாறி 4 மாத பச்சிளம் குழந்தையை தரையில் போட்டு அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மஞ்சு மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். ஆனால் போகும் வழியிலேயே குழந்தை இருந்ததால் அச்சத்தில் ஒரு கட்டை பையில் குழந்தையை கோவில் அருகே வைத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சந்திரசேகர் மற்றும் அவரது தாயை கைது செய்தனர். மேலும் மஞ்சு தென்காசியில் இருக்கும் தனது கள்ளக்காதலன் வீட்டில் பதுங்கி இருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.