தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து கட்சியில் மாவட்ட செயலாளர்கள் உட்பட புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகளை விஜய் செய்து வருகிறார்.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வாங்க 15 லட்ச ரூபாய் பேரம் பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் கட்சிப் பதவிகளை வாங்க பணம் கொடுக்கல் வாங்கல் இருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் கடுமையாக எச்சரித்த நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதன்படி மொத்தமுள்ள 38 மாவட்டங்களுக்கு 120 மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்துள்ளார். அவர் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியையும் தனித்தனியாக அழைத்து பேசினார். இந்நிலையில் விஜய் புதிதாக கட்சி பணியில் சேர்ந்தவர்களுக்கு வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கினார். மேலும் அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் விஜயின் புகைப்படமும் மற்றொரு பக்கத்தில் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் கொடியின் புகைப்படமும் இருந்தது.