தமிழகத்தில் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவைகளில் வரும் பல்வேறு துறைகளில் உள்ள 369 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது. இந்தப் பணிக்கு தமிழக முழுவதும் 59 ஆயிரத்து 630 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு வருகின்ற ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.