குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஏழு தமிழர்கள் உயிரிழந்த நிலையில் தீ விபத்தில் சிக்கிய 35 இந்தியர்களுக்கு வென்டிலேட்டர் உதவியோடு உயிர் காக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக குவைத் தமிழ் சங்கம் கூறியுள்ளது .

மேலும் அவர்கள் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகிச்சையில் உள்ள 35 இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். மயக்க நிலையில் பலர் இருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.