
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 34 பேரூராட்சிகளின் நிர்வாக தரத்தில் உயர்வு வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் சேவைகள் மேம்படும் வகையில் நகர்ப்புற ஒழுங்கமைப்புகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும், 8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாகவும், மேலும் 3 முதல் நிலை பேரூராட்சிகள் நேரடியாக சிறப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் நகர்ப்புற சேவைகள், நிதி ஒதுக்கீடு, நிர்வாக வசதிகள் ஆகியவை மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரம் உயர்த்தப்பட்ட சிறப்பு நிலை பேரூராட்சிகள்
கோவை – சாத்தான்குளம், ஒத்தக்கல் மண்டபம்,
சேலம் – பி.என்.பட்டி,
திருவள்ளூர் – திருமழிசை,
தஞ்சாவூர் – பேராவூரணி,
ஈரோடு – நம்பியூர்,
மதுரை – வாடிப்பட்டி,
கிருஷ்ணகிரி – பர்கூர் ஆகியவை சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்ந்துள்ளன.
தேர்வு நிலைக்கு மேம்படுத்தப்பட்டவை:
தேனி – பழனிசெட்டிபட்டி, மேலசொக்கநாதபுரம்
கன்னியாகுமரி – குலசேகரம், இடிகரை
கோவை – செட்டிபாளையம், மோபிரிபாளையம், சுலீஸ்வரன்பட்டி, தொண்டாமுத்தூர்
திண்டுக்கல் – அகரம், செவுகம்பட்டி
தென்காசி – மேலகரம்
ராமநாதபுரம் – முதுகுளத்தூர்
முதல் நிலைக்கு மேம்படுத்தப்பட்டவை:
கன்னியாகுமரி – வெள்ளிமலை, புத்தாளம், மண்டைக்காடு, ஆத்தூர்
கோவை – ஆலந்துறை
ஈரோடு – எலாத்தூர்
தேனி – புத்திபுரம்
சேலம் – நங்கவல்லி
மாநில அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால், குறைந்த வாய்ப்புகளுடன் இருந்த பகுதிகளும் விரிவான கட்டமைப்பு மற்றும் நிதியுதவிகளைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இது நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை என கருதப்படுகிறது.