நாடு முழுவதும் விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன்படி    டெல்லி -பிராங் போர்ட்,      சிங்கப்பூர்-மும்பை, பாலி- டெல்லி, சிங்கப்பூர்- புனே உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைப் போல இன்டிகோ நிறுவனத்தின் விமானங்களான புனே- ஜோத்பூர்,கோவா-அகமதாபாத், கோழிக்கோடு – சவுதி உள்ளிட்ட விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனால் விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஆகையால் விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அந்த அளவிற்கு காணப்படவில்லை. இதனால் சுமார் ரூபாய் 80 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. அதோடு நேற்று ஒரு நாளில் மட்டும் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.