தமிழகத்தில் கோடை விடுமுறை அதிகரித்துவிட்ட நிலையில் குடிநீரின் தேவை என்பதும் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக கேனில் விற்கப்படும் குடிநீர்களுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அதாவது கேனில் தண்ணீர் அடைக்கப்படும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதி போன்றவைகளை குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு கால்சியம் அளவு ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லி கிராம் என்ற அளவிலும், மெக்னீசியம் அளவினை 5 முதல் 30 மில்லிகிராம் அளவிலும் கலக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கேனில் குடிநீரை 30 முறை மட்டும் தான் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் குடிநீர் கேனின் நிறம் மாறினால் கண்டிப்பாக அதனை பயன்படுத்தக் கூடாது. மேலும் அவ்வாறு செய்தால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் சோதனை நடைபெறும் போது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.