
தமிழக அரசு பொது மக்களுடைய நலனை கருத்தில் கண்டு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து வசதி என பல திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வரின் “காக்கும் கரங்கள் திட்டம்” கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் .
இந்த திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்குவதற்கு ஒரு கோடி கடன் பெறலாம். அதோடு இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற்று தொடங்கப்படும் தொழில்களுக்கு கடன் தொகையில் 30 சதவீத மானியமும் கிடைக்கும். அதோடு 3% வட்டி மானியமும் பயனாளர்கள் பெறலாம். இந்த திட்டத்திற்கு www.exwel.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள், படைவீரரை வீரர்களை சார்ந்த வாரிசுகள், கைம் பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.