கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடையில் 30 வயதுடைய பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் மூன்று பேர் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனை பார்த்து அந்த பெண் கூச்சலிட்டதால் சிறுவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். இதனையடுத்து சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எச்சரித்து காவல் நிலைய ஜாமீனில் அவர்களை விடுவித்தனர்.