ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஏற்கனவே இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக மூன்றாவதாக கர்ப்பம் தரித்தார். இவருக்கு மூன்றாவதாக குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாததால் கருவை கலைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் மருந்து கடைக்கு சென்று கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார். அப்போது அவருக்கு பாதி அளவுக்கு மட்டுமே கரு கலைந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 3 வருடங்களாக அந்த பெண் வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு இளம்பெண் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்தபோது வயிற்றில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குழந்தையின் எலும்புக்கூடுகள் வயிற்றில் அப்படியே இருந்தது. இதைத்தொடர்ந்து ஆபரேஷன் மூலமாக வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை மருத்துவர்கள் அகற்றினர். மேலும் இதைத் தொடர்ந்து இளம்பெண் நலமுடன் இருப்பதாகவும் ஒரு வாரத்திற்கு பின் அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.