சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணம் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு 60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைகளை முதல்வர் வழங்கினார்.‌ அதன்பின் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 3 வருடங்களில்‌ 2226 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு 10,638 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1103 கோடி நன்கொடையாக கிடைத்துள்ள நிலையில், இதன் மூலம் கோவில்களில் 9163 பணிகள் நடந்து வருகிறது. அதன்பிறகு 7609 ‌ கோடி ஏக்கர் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 6792 கோடி ரூபாய் ஆகும். 1,74,894 ஏக்கர் நிலங்கள் அளவிடப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளது. நம்முடைய அரசு ஆயிரம் காலம் பழமையான கோவில்களை பாதுகாக்க முன்னெடுத்துள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு கோவில் மூலம் கிடைக்கும் பணத்தை டெபாசிட் செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டியை பயன்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.