நம் நாட்டில் பெண்கள் காணாமல் போவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவணம் காணாமல் போன பெண்கள் தொடர்பான அறிக்கையை  வெளியீட்டுள்ளது. அதன்படி 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை  18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.

அதேபோன்று 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் 2.51 லட்சம் பேர் காணாமல் போய் உள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையில் காணாமல் போனது மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான். தமிழகத்தில் மட்டும் 57,000 பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என தெரிய வந்துள்ளது.