சூரிய உதயம் என்பது அனைவருக்கும் தேவைப்பட்ட ஒரு விஷயமாகும். அதிகம் குளிரான நேரங்களில் சூரியன் உதித்தால்தான் காலநிலையை சமநிலைப்படுத்த முடியும். ஆனால் இத்தாலியில் உள்ள விக்னெல்லா என்ற கிராமத்தில் நவம்பர் 11 முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரையில் சூரிய ஒளி மிக குறைவாக இருக்கும். இதனால் அங்கிருந்த மக்கள் 2005 ஆம் ஆண்டு சுமார் ஒரு கோடி திரட்டப்பட்டு பின்னர் ஊர் எதிரே உள்ள மலையில் பிரம்மாண்ட கண்ணாடி அமைக்கும் பணி தொடங்கியது.

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிராம மக்கள் மலையின் மேல் 40 சதுர மீட்டர் கண்ணாடியை நிறுவினர். இதனால் குறைந்த அளவு சூரிய ஒளி உயரமான இடத்தில் உள்ள கண்ணாடி மீது படும்போது அதை எதிரொளிக்கும். இதன் அடிப்படையில் 26 ஆம் ஆண்டு அந்த கிராமம் முழுமையாக சூரிய ஒளியை பெற தொடங்கியது. சூரிய ஒளியைப் பெற இந்த கிராமம் செய்த முயற்சி பல நாடுகளில் பேசு பொருளாகியுள்ளது.