தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் அருகே ராஜாராம் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளி ஆன இவருக்கு தமிழ் இலக்கியா என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 23ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்று அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தின் அருகே தலையில் கல்லை போட்டபடி கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவருடைய மனைவிக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தமிழ் இலக்கியாவை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது சரவணக்குமார் என்ற 23 வயது வாலிபருடன் இலக்கியா கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அதாவது கணவர் வெளியூருக்கு அடிக்கடி வேலைக்கு சென்று வந்த நிலையில் இலக்கிய பியூட்டி பார்லர் வைப்பதற்காக அரூர் பகுதிக்கு பயிற்சிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சரவணக்குமார் என்பருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதில் சரவணகுமார் மற்றும் ராஜாராம் இடையே திடீரென பழக்கம் ஏற்பட்ட நிலையில் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ராஜாராம் அவரை கண்காணிக்க ஆரம்பித்தார். கள்ளக்காதலை கைவிடும்படி ராஜாராம் தன் மனைவியின் தகராறு செய்து வந்த நிலையில் இது தொடர்பாக இலக்கிய தன் கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். பின்னர் கள்ள காதலுக்கு ராஜாராம் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்து கட்ட இருவரும் முடிவு செய்தனர்.

அதன்படி நண்பர் என்ற முறையில் சரவணகுமார் அவரை மது குடிக்க அழைத்து சென்றுள்ளார். மது போதை அதிகமான நிலையில் ராஜாராமை வீட்டில் விடுவதாக கூறி பைக்கில் ஏற்றி வந்த சரவணக்குமார் ஆளில்லாத நேரம் பார்த்து ஒரு இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு மயக்க நிலையில் இருந்து அவர் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டார். இதில் துளி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இலக்கியா மற்றும் சரவணகுமார் இரு வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.